ஓடிடியில் வெளியானது திரு. மாணிக்கம்!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரு.மாணிக்கம் படம் ஓடிடியில் வெளியானது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவும் பிரதான பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க: குடி கெடுத்த குடும்பங்களின் கதை... பாட்டல் ராதா - திரை விமர்சனம்

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், திரு.மாணிக்கம் படம் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Read Entire Article