ARTICLE AD BOX
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நாளை(மார்ச் 7) வெளியாகிறது.
இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: கோல்டன் ஸ்பேரோ பாடல் விடியோ!
குடும்பஸ்தன் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை காணலாம்.
யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
செளனா கெளதம் இயக்கத்தில் சைஃப் அலி கான் மகன் இப்ராஹிம் அலி கான், குஷி கபூர் நடிப்பில் வெளியான நாதானியன் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.
இப்படங்கள் அல்லாமல், கடந்த வாரம் வெளியான சங்கராந்திக்கி வஸ்துன்னாம் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்திலும், விடாமுயற்சி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும், பராரி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.