ARTICLE AD BOX

OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தற்போது வாரா வாரம் ஓடிடி ரிலீஸை பார்ப்பதும் ஒரு வழக்கமாக மாறி இருக்கும் நிலையில் இந்த வார லிஸ்ட் வெளியிடப்பட்டு விட்டது.
நாகர்ஜூனாவின் இரண்டாவது மகனான அகில் அக்கினினி நடிப்பில் வெளியான ஐந்தாவது திரைப்படம் ஏஜெண்ட். பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தும் படம் படுசுமார் ரகம் என்பதால் பெரிய தாமதத்திற்கு பின்னரே சோனி லைவ் ஓடிடிக்கு வந்துள்ளது.
மேலும் நெட்பிளிக்ஸில் வன்வஸ், எமெர்ஜென்சி, அசாட் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பேசில் ஜோசப் இயக்கத்தில் அடுத்த திரைப்படம் பொன்மேன். அலட்டல் இல்லாத கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜீயோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

ஆஹா ஓடிடியில் சீ சா, 2 கே லவ் ஸ்டோரி, மெர்சி கில்லிங் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. சிம்பிளி சவுத்தில் ரிங் ரிங் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பிரைமில் ஹத்யா, மலையாளத்தில் த்ராயம், ஆங்கிலத்தில் க்ளாடியேட்டர் 2, ஹிந்தியில் பீ ஹேப்பி, அர்ஜூனா பால்குனா, கொரியன் பெட் எவில்ட் படங்கள் வெளியாக இருக்கிறது.
அச்சாரிபா ஹாட்ஸ்டார் ஓடிடியில், ஆங்கிலத்தில் தி அவுட் ரன் நெட்பிளிக்ஸில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ராமம்ராகவன், சிம்ப்ளி சவுத்தில் தி மலபார் டேல்ஸ், நெட்பிளிக்ஸில் தி எலெக்ட்ரிக் ஸ்டேட் படமும், டெண்ட்கொட்டா ஓடிடியில் காதல் என்பது பொது உடைமை படமும் வெளியாக இருக்கிறது.
சரி டைட்டிலுக்கு வருவோம். தமிழ் ரசிகர்களுக்கு ஓடிடி சர்ப்ரைஸ் என்னவென்றால் பெரிய தமிழ் படங்கள் எதுவுமே இந்த வார லிஸ்ட்டில் இல்லை என்பதுதான்.
