ARTICLE AD BOX

மைதானத்தில் பவுண்டரி, சிக்சர் என்று ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களாகி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக மாறியுள்ளார். அதாவது இவர் வெப் தொடர் புரோமோவில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த வெப் தொடரை எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். இதற்கு 'காக்கி தி பெங்கால் சாப்டர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெங்காலி மொழியில் ஸ்ரீ வெங்கடேஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரில் ஜீத், பரம்ப்ரதா சாட்டர்ஜி, சச்வதா சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வருகிற 20-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அந்த பயோபிக்கில் கங்குலி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.�