ஒளிர்விடும் எம் தேசனே.. மகா சிவராத்திரிக்கு ஆதி யோகி சிலைக்கு முன் இந்திரஜா சங்கர் செம போஸ்!

17 hours ago
ARTICLE AD BOX

ஒளிர்விடும் எம் தேசனே.. மகா சிவராத்திரிக்கு ஆதி யோகி சிலைக்கு முன் இந்திரஜா சங்கர் செம போஸ்!

News
oi-Mari S
By
| Published: Thursday, February 27, 2025, 10:40 [IST]

சென்னை: ஆண் குழந்தையை பெற்றெடுத்த இந்திரஜா சங்கர் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் உடல் எடையை குறைத்து இப்படி மாறிவிட்டாரா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மகா சிவராத்திரி நேற்று இரவு கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சிவபெருமானுக்காக பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து பிரார்த்தனை செய்வது வழக்கம். நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் திருவிழா போல காட்சியளித்தன.

Indraja Shankar Maha Shivratri 2025 robo shankar 2025

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்த நிலையில், அவர்கள் அதனை வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆதியோகி சிலை முன் இந்திரஜா சங்கர்: "ஒளிர்விடும் எம் தேசனே.. குளிர்மலை தன் வாசனே.. எழில்மிகு எம் நேசனே.. அழித்தொழிக்கும் ஈசனே..,.. மஹா சிவராத்திரி.." என ஆதியோகி சிலை முன்பாக பரதநாட்டியம் ஆடுவது போல ஒரு காலை தூக்கிக் கொண்டு போஸ் கொடுத்து இந்திரஜா சங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Indraja Shankar Maha Shivratri 2025 robo shankar 2025

அதற்குள் இப்படியா?: திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமான இந்திரஜா சங்கர் அழகான ஆண் குழந்தையையும் சமீபத்தில் பெற்றெடுத்தார். 'சி' செக்‌ஷன் மூலம் குழந்தை பெற்றெடுத்த இந்திரஜா சங்கர் அதற்குள் இப்படியா செம ஆக்டிவாக உள்ளார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இது அவருடைய த்ரோபேக் புகைப்படம் என்றும் நேற்று ஆதியோகி சிலை முன்பாக எடுத்த போட்டோ இல்லை என்றும் ஒரு சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். லேட்டஸ்ட்டாக ஈஷா யோகா மையத்திற்கு அவர் சென்றிருந்தால் இந்நேரம் ரீல்ஸ் வீடியோவே போட்டிருப்பாரே என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்த விளக்கத்தை அவரே கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indraja Shankar Maha Shivratri 2025 robo shankar 2025

கூரன்: எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் உருவாகியுள்ள கூரன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பிகில், விருமன் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்திரஜா சங்கர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெற்றெடுத்த நிலையில், மீண்டும் பழையபடி சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Indraja Shankar shares a superb pic infront of Adiyogi statue: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலைமுன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்திரஜா சங்கர் ஷேர் செய்துள்ளார்.
Read Entire Article