ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் மகா கும்பமேளா: பிரதமர் மோடி

4 hours ago
ARTICLE AD BOX

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் நிறைவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி 45 நாள்கள் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வு சிவராத்திரி பெருவிழாவோடு இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு லட்சம் 2 லட்சம் அல்ல.. 65 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இப்படியொரு மாபெரும் ஆன்மிக நிகழ்வு எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை.

பொதுவாக கும்பமேளா நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதிலுமிருந்து சாதுக்கள், துளவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜில் தங்கி நீராடினர். 45 நாள்களில் முக்கியமான 6 நாள்களில் திரளானோர் வந்து புனித நீராடிச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமத்தில் புனித வழிபாடுகள் நடத்தினர். பல இளம்பெண்களும் தீட்சை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாள்களும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரே இடத்தில் திரண்டது மிகப்பெரிய விஷயம். எதிர்பார்த்ததை விட அதிகளவிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

Read Entire Article