ஒரே மாதத்தில் 12 கொலைகள்: கொலை நகரமா சென்னை?

1 day ago
ARTICLE AD BOX

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று இரட்டைக் கொலை நடந்துள்ள நிலையில், ஒரே மாதத்தில், அடுத்தடுத்து 12 கொலைகள் நடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் தொழில் போட்டி, முன் விரோதம் காரணமாக இந்த கொலைகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அருண், சுரேஷ் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு மாதத்தில் 12 கொலைகள்

* ஆதம்பாக்கத்தில், தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது.

* பல்லாவரத்தில் ரவுடி அருண்குமார் என்பவரை, மர்ம நபர்கள் ஆறு பேர் கொலை செய்துள்ளனர்.

* ஆவடியில் உணவு தாமதமாக கொடுத்த மனைவியை, கணவரே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்

* ஏழுகிணறு பகுதியில் பொறுப்பில்லாமல் இருக்கிறாய் என, திட்டிய தந்தையை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

* கொருக்குப்பேட்டையில், முன்விரோதம் காரணமாக சமையல்காரர் சதீஷ்குமாரை கொலை செய்த சரத்குமார் கைது செய்யப்பட்டார்.

* அம்பத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது.

* தேனாம்பேட்டையில் கால் டாக்சி ஓட்டுனர் ராஜா என்பவரை கொலை செய்த வழக்கில் மூவர் கைது.

* வடபழனியில் பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்வோர் இடையே நடந்த தகராறில் தாஜ் உசேன் என்பவரை கொலை செய்தவர் கைது

* திரு.வி.க.நகரில் மதுபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

* முகப்பேரில் காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் தாய் மைதிலி கழுத்தை நெறித்துக் கொன்றவர் கைது.

Read Entire Article