ARTICLE AD BOX
இப்ரஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் 325 எடுத்தது.
அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இப்ரஹிம் ஸத்ரான் படைத்த சாதனைகள் என்னென்ன?
இப்ரஹிம் ஸத்ரான் இந்தப் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
1. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்
இதுவரை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்தின் பென் டக்கெட் அதிகபட்சமாக 166 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இதை முறியடித்து ஸத்ரான் 177 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
2. சாம்பியன்ஸ் டிராபி 2025இல் அதிக சிக்ஸர்கள்
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்லீஷ் ஒரே போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியிருந்தார். தற்போது, இப்ரஹிம் ஸத்ரானும் 6 சிக்ஸர்களுடன் அவருடன் சமன்செய்துள்ளார்.
3. இரண்டு ஐசிசி போட்டிகளில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர்
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
4. ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள்
ஆப்கானிஸ்தான் வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5. பாகிஸ்தானில் அதிக ரன்களில் 4ஆவது இடம்
பாகிஸ்தானில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 188 ரன்களுடன் கேரி கிரிஸ்டன் இருக்கிறார்.