ஒரே பெண்ணை காதலிக்கும் அப்பா-மகன்! LIK படத்தின் கதை இதுதானா..?

3 hours ago
ARTICLE AD BOX

LIK Movie Story Leaked : சமீபத்தில் வெளியான டிராகன் படம் மூலம் பெரிய ஹிட் நடிகரான, பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIK படம்:

இந்த படத்தின் முழு பெயர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இதனை சுருக்கமாக LIC என்று அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து LIC என்று இருந்ததை LIK இன்று மாற்றிவிட்டனர். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் தொய்வான நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சைன் செய்த போதுதான், பிரதீப் டிராகன் படத்திலும் கமிட் ஆனார். அந்த படத்தில் வேலைகள் துரிதமாக முடிக்கப்பட்டு பின்பு பெரிய ஹிட் அடித்துவிட்டது. ஆனால் இன்னும் LIK பட வேலைகள் முடியவில்லை.

கதை என்ன? 

LIK படத்தின் கதை இதுதான் என்று இணையத்தில் உள்ள தகவல் வைரல் ஆகி வருகிறது. இதன்படி, டைம் டிராவல் மூலம் நேரத்தை கடந்து பயணம் செய்யும் தந்தையும் மகனும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். அந்தப் பெண் ஒரு விபச்சாரி. இதுதான் இந்த படத்தின் கதை என்று அனைவரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

pic.twitter.com/rGMW5E7FyQ

— Christopher Kanagaraj (@Chrissuccess) March 10, 2025

இதைக் கேட்டதிலிருந்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்கில் உள்ளனர். ஒரு சிலர் இது கேட்பதற்கு சிந்து சமவெளி படத்தின் கதை போல இருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

எந்த வகை படம் இது?

LIK படத்தின் கதை, இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சைன்ஸ் ஃபிக்ஷன், டிராமா, திரில்லர், ஃபேண்டசி கதையம்சம் அடைந்த படமாக இது இருக்கிறது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் என்ன ஆவார் என்ற கலக்கமும் சிலருக்கு எழுந்துள்ளது. 

ஹீரோ அப்செட்? 

ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கும், அதில் நடிக்கும் இன்னொரு இயக்குனரான சீமானுக்கும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் காட்சிகளில் நடக்கும் போது சற்று நெருடலுடன் உணர்வதாக கூறப்படுகிறது. இந்த காட்சி எதற்கு என்று விக்னேஷ் சிவனிடம் கேட்கும்போது அவராலேயே அதற்கு தெளிவான பதில் கூற முடியவில்லை என்ற கூறப்படுகிறது. எனவே தற்போது அடுத்தடுத்து லவ் டுடே, டிராகன் என்று இரண்டு படங்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள பிரதீப்பிற்கு இது அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடைசியில் படம் நன்றாக வந்தால் போதும் என்று படக்குழுவினர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மீண்டு வருவாரா விக்னேஷ் சிவன்?

இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு எடுத்த அனைத்து படங்களுமே விமர்சன ரீதியாகவோ, வசூல் ரீதியாகவோ அவருக்கு தோல்வியை கொடுத்துள்ளது. அதற்கு உதாரணம் அவர் கடைசியாக இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல். படத்தின் கதை, புது மாதிரியானதாக இருந்தாலும் அது தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. போதாக்குறைக்கு அஜித்துடன் அவர் நடிக்க இருந்த படமும் தோல்வியுற்றது.  இதற்கிடையே சில விஷயங்களால் இணையத்தில் ட்ரோலும் செய்யப்பட்டார். தற்போது LIK படத்தின் கதையும் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், இந்த முறையாவது இவர் மீண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | நயன்தாரா விக்னேஷ் சிவன் லவ் இந்த படத்திலிருந்து ஆரம்பிச்சுதா !

மேலும் படிக்க | விடாமுயற்சி தோல்வி? அஜித்தை தாக்கி விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பதிவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article