ARTICLE AD BOX
Idly Kadai vs Madharasi Release Date : தனுஷின் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Idly Kadai vs Madharasi Release Date : மாஸ் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் எப்படி ஒரே பாட்டுல எல்லாமே மாறுமோ அதே போன்று தான்சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் தான் அமரன். இந்த படத்திற்கு முன்னதாக எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களை பார்த்து, ரசித்து அப்படியே மறந்தும் விடுவார்கள். ஆனால், அமரன் படத்தை இன்றும் கொண்டாடுகிறார்கள். அதற்கு இயக்குநர் ஒரு காரணமாக இருந்தாலும் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறும் ஒரு காரணம். அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து ரூ.335 கோடிக்கும் அதிகமாக வசூல் எடுத்து கொடுத்துள்ளார்.

அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜூ மேனன், வித்யுத் ஜம்வால் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று தான் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ப்ரித்வி ராஜன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படமும் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

டான் பிக்சர்ஸ் மற்றும் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இட்லி கடை படமும் மதராஸி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு ஒரு முன்னதாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி 2 பெரிய நடிகர்காளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இட்லி கடை வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.