ஒரே கேள்விதான்… திக்குமுக்காடிய விஜய்.. கூலா பதில் சொல்லி மிரளவைத்த ரஜினி

1 day ago
ARTICLE AD BOX
rajinivijay 1

இன்று பல இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இந்த சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட சாதனைகள் போராட்டங்கள் கஷ்டங்கள் என எல்லாவற்றையும் கடந்து இன்று ஒரு சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கிறார் ரஜினி. தன்னுடைய 73 வது வயதிலேயும் அதே புத்துணர்ச்சியிடனும் ஸ்டைலுடனும் தன்னுடைய பங்களிப்பை சினிமாவிற்காக கொடுத்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அந்த படம் கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. தமிழ் சினிமாவில் ஒரு வசூல் மன்னனாக கடந்த சில வருடங்களாக ரஜினி தான் இருந்து வருகிறார். பாக்ஸ் ஆபிஸில் மன்னன் என்று இவரை சொல்லலாம் .காலம் காலமாக ரஜினி கமல் என போட்டி மாறி இப்போது ரஜினி விஜய் என்று உருவாகி இருக்கிறது. அதுவும் லியோ படத்தின் போது ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே பெரும் மோதல் இருந்து வந்தது.

ஆனால் அது அவர்கள் ஏற்படுத்திய மோதல் கிடையாது. அவர்களுடைய ரசிகர்கள் ஏற்படுத்திய மோதல் என்று தான் சொல்ல வேண்டும். மாறி மாறி இருவருமே சமூக வலைதளங்களில் தீட்டி தீர்த்துக் கொண்டனர். அதை ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சுமூகமாக அந்த சண்டையை நிறுத்தி வைத்தார். விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஜனநாயகன் என பெயரிடப்பட்ட அந்த படம் தான் விஜயின் கடைசி படம். அடுத்து அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலில் தீவிரமாக இறங்க இருக்கிறார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார் விஜய் .இந்த நிலையில் கட்சி ஆரம்பித்து பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி இன்னும் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற ஒன்றை அவர் நடத்தவே இல்லை, அதற்காகத்தான் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட கேள்விகள் பத்திரிக்கையாளர்களிடம் இருக்கிறது .விஜய் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறார். எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

அதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .முன்பு ஒரு பழைய பேட்டியில் விஜயிடம் உங்களுக்கு உங்களிடம் பிடித்த குணம் என்ன என்ற ஒரு கேள்வியை நிருபர் கேட்க அதற்கு விஜய் சில வினாடி யோசித்துக்கொண்டே இருக்கிறார். அதை கட் பண்ணினால் இதே கேள்விதான் கே. பாலச்சந்தர் ரஜினியிடம் ஒரு விழா மேடையில் கேட்டிருப்பார் .

உன்னிடம் உனக்கு பிடித்த குணம் என்ன என கேட்டிருப்பார். சற்றும் யோசிக்காமல் ரஜினி உடனே உண்மையையே பேசுறது என சொல்லி இருப்பார். ரஜினியையும் விஜயையும் இந்த வீடியோவை வைத்து கம்பேர் செய்து இதுக்கே விஜய் இப்படி திணறாரு. ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் காத்திருக்கிறார்கள். எப்படி பதில் சொல்லப் போகிறார் என அவருடைய அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி ரசிகர்கள் அந்த கமெண்டில் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/White_Bear_RP/status/1903390974191243327

Read Entire Article