ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை - ரோகித் சர்மா

4 hours ago
ARTICLE AD BOX

image courtesy: @ICC

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது,

எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

Read Entire Article