ARTICLE AD BOX
மலையாள நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். வாருங்கள் அது என்ன படம் என்று பார்ப்போம்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் லால், தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் எம்புரான் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ப்ரித்வி ராஜ். 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்' மூலம் ப்ரித்வி ராஜ் இயக்குநராகவும் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தையும் ப்ரித்வி ராஜ் தான் இயக்கினார். இதில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
அந்தவகையில் இப்படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. புக் மை ஷோ இணையத்தளத்தில் ஒரு மணி நேரத்தில் இதுவரை வேறு எந்த இந்தியப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு 96,140 டிக்கெட்டுகள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஒரு நேர்காணலில் மோகன் லால் மற்றும் ப்ரித்விராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது பிரித்விராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம். ஒரு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள். அக்ஷய் குமார் அப்படி இருந்திருக்கிறார். நாங்கள் இதுவரை இல்லாத ஒன்றை முயற்சித்து இருக்கிறோம்.
அதற்கு இப்படி எல்லாம் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும். ரூ.100 பட்ஜெட்டில் ரூ.80 கோடி நடிகர்களுக்கே செலவு செய்வதுபோல் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மொத்த செலவும் படத்தை உருவாக்க மட்டுமே உபயோகித்துள்ளோம். மலையாள நடிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களுமே ஒத்துழைத்திருக்கிறார்கள்.” என்று பேசினார்.