ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2024/10/19/roAKVgVdTdhv19RpF9s7.jpg)
போதுமான ஓய்வு எடுத்த பிறகும் கூட சோர்வாக இருக்கிறதா? அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது மளிகைப் பொருட்களை தூக்கி செல்வது போன்ற வழக்கமான செயல்களை செய்வதில் சிரமமாக உள்ளதா? மாரடைப்பின் முன்கூட்டிய மற்றும் பலரால் மிகவும் கவனிக்கப்படாத அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான சோர்வு. இந்த வகை சோர்வு இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் போராடும் போது, நமது உடலானது அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு ஆற்றலை திருப்பி விடுவதன் மூலம் ஈடுசெய்கிறது, இதனால் ஒருவே மிகுந்த சோர்வாக மற்றும் பலவீனமாக உணர்வது
/indian-express-tamil/media/media_files/2024/10/19/gi64jVrWAyq7CXx4TA19.jpg)
மார்பில் இறுக்கம் அல்லது பாரமாக உணரும் அசௌகரியம்: மார்பு பகுதியில் யாரோ அழுத்தம் கொடுப்பது, நெஞ்சு பாரமாக இருப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறதா? மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. இருப்பினும், சில நபர்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மார்பு பகுதியில் லேசான அழுத்தம் அல்லது அசௌகரிய உணர்வை எதிர்கொள்ள நேரிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/V0PcAtbSH5kdG809eRJ6.jpg)
மனபதற்றம்: எந்த லாஜிக்கான காரணமும் இல்லாமல் மிகுந்த கவலையுடன் இருப்பதை போல உணர்கிறீர்களா? சிலர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு விவரிக்க முடியாத கவலை அல்லது ஏதோ தவறு இருப்பதை போல வலுவான உணர்வால் அல்லது மனபதற்றத்தால் தவிக்கிறார்கள். மார்பு அசௌகரியத்துடன் கூடிய பேனிக் அட்டாக் (Panic attack) அல்லது மூச்சுத் திணறல் கூட மாரடைப்பிறகான முன்கூட்டிய அறிகுறியாக இருக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/BdqAVaHMiAdPU0tdiovU.jpg)
மூச்சு திணறல் அல்லது அசௌகரியம் காரணமாக இரவில் பலமுறை எழுந்திருப்பது மாரடைப்பால் கூட ஏற்படலாம். மாரடைப்பிலிருந்து தப்பி பிழைத்த பலர், அட்டாக் நிகழ்வுக்கு சில வாரங்களுக்கு முன் தங்கள் வழக்கமாக தூங்க முடியாமல் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளனர். இவர்கள் அனுபவித்த அறிகுறிகளில் தூங்குவதில் சிரமம், இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பு அல்லது தூங்க போதுமானநேரம் இருந்தபோதிலும் அமைதியின்மை உணர்வு போன்றவை அடங்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/ss0MXk6KBU262oaQnKDz.jpg)
லேசான உடல் செயல்பாடுகளின் போது கூட சுவாசிப்பதில் சிரமம் உள்ளதா? அல்லது நள்ளிரவில் மூச்சு திணறல் காரணமாக எழுகிறீர்களா.! இது போன்ற மூச்சு சார்ந்த பிரச்சனை dyspnea-ஆக இருக்கலாம். இதன் போது உங்கள் மார்பு இறுக்கமாக இருப்பதைப் போலவும், நீங்கள் காற்றுக்காக மூச்சுத் திணறுவது போலவும் அல்லது சுவாசிக்க கடினமாக இருப்பதை போலவும் உணர் கூடும். இது உங்கள் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் போராடும் போது இது நிகழ்கிறது, இதனால் நுரையீரலில் திரவம் உருவாகிறது. இதனால் நுரையீரலில் திரவம் குவிகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/SiCAfBp7ZG1WGxBrokdz.jpg)
உடலின் கீழ் பாகங்களில் வீக்கம்: பாதங்கள், கணுக்கால் அல்லது கால்கள் போன்ற உடலின் கீழ் பகுதிகளில் ஏற்படும் அசாதாரண வீக்கத்திற்கு இதய பிரச்சனை காரணமாக இருக்கலாம். எடிமா அல்லது உடலின் கீழ் பகுதிகளில் ஏற்படும் இது போன்ற வீக்கம், ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் இதயம் போராடுவதற்கான அறிகுறியாக இருக்கலாம், இதன் காரணமாக திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது.
/indian-express-tamil/media/media_files/p5r2gMBuITutz8XlkHU0.jpg)
மேலே கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தொடர்ந்து அனுபவித்தால், மருத்துவரிடம் உடனடியாக செல்வது மிக முக்கியம். வழக்கத்திற்கு மாறாக உடலில் ஏற்படும் லேசான அல்லது அவ்வப்போது ஏற்படும் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் அவை மிகவும் தீவிரமான பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.