ARTICLE AD BOX
ஒரு பாகிஸ்தான் வீரர் நினைத்தால், இந்திய அணியை முழுவதுமாக வீழ்த்த முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் யுவராஜ்.
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் ஆரம்பமானது. அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன.
இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் ஒரு போட்டி என்றால், அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். இவர்கள் இருவரும் மோதும் முதல் போட்டி பிப்ரவரி 23ம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டது.
இந்த சாம்பியன்ஸ் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளின் முன்னாள் வீரர்கள் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். இரு நாட்டு முன்னாள் வீரர்களும் அவரவர்கள் நாட்டு அணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் உள்ளது. ஏனெனில் அவர்கள் அங்கு அதிகமான போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்ற ஷாகீன் அப்ரிடியின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் குறைவாக இருந்தாலும் ஒரு வீரர் நினைத்தாலும் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியதாகும். இறுதியில், சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெறும்.” என்றார்.