ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

15 hours ago
ARTICLE AD BOX

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில், 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாக சிறப்பு பெறுகிறது. இந்த தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த புனித ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும் வழக்கம் உள்ளது. அந்த வகையில், இவ்வருடத்தின் பங்குனி உற்சவம் இன்று கொடியேற்ற விழாவுடன் தொடங்கியது.

விழாவின் தொடக்க நிகழ்வில், உற்சவர் பூமாதேவி சமேத பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர், கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, மூலவர் ஒப்பிலியப்பன் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தரிசனம் வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

???? தினமும் உற்சவர், பெருமாள்-தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும்.

???? முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

???? அதன் பின்னர் அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி, உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடு போன்ற வைபவங்களுடன் விழா நிறைவடைகிறது.

இவ்விழா சிறப்பாக நடைபெற தேவையான அமைப்புகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

Read Entire Article