ARTICLE AD BOX
கரூர்:கரூர் மாவட்டம் கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சிவா (43). இவர் தலைமை ஆசிரியருக்கு, ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்சமயம் ஒன்றிய அரசானது மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை கண்டித்தும், மும்மொழிக்கொள்கை ஏற்று கொண்டால் தான் கல்வி சார்ந்த நிதி உதவிகள் வழங்கப்படும் என்ற சர்வாதிகார போக்கை கண்டித்தும், எனது இளநிலை உதவியாளர் அரசு பணியை நேற்று (26ம் தேதி) ராஜினாமா செய்கிறேன் என்பதை, பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு: அரசு ஊழியர் ராஜினாமா appeared first on Dinakaran.