ஒன்றாக ரீல்ஸ் எடுத்து இளம்பெண்கள் பலாத்காரம்: கேரளாவில் பிரபல யூடியூபர் கைது

1 day ago
ARTICLE AD BOX

திருவனந்தபுரம்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியும், ஒன்றாக சேர்ந்து ரீல்ஸ் எடுத்தும் பல இளம்பெண்களை பலாத்காரம் செய்த கேரளாவை சேர்ந்த பிரபல யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே இரவுகாடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஹாபிஸ் (28). பிரபல யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் இவர் திருக்கண்ணன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தநிலையில் ஹாபிஸ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறி ஆலப்புழாவை சேர்ந்த ஒரு இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீசார் ஹாபிசை கைது செய்து விசாரித்தனர்.
இதில் பல இளம்பெண்களையும் ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தன்னுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்தால் எளிதில் பிரபலமாகலாம் என்று கூறி பல இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். விசாரணைக்குப் பிறகு போலீசார் முகம்மது ஹாபிசை ஆலப்புழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஒன்றாக ரீல்ஸ் எடுத்து இளம்பெண்கள் பலாத்காரம்: கேரளாவில் பிரபல யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article