ARTICLE AD BOX
ஒட்டி உரசி நடிக்கிறது எல்லாம் தேவையே இல்லை.. கரீனா கபூர் கட் அண்ட் ரைட்டாம் அந்த விஷயத்தில்!
மும்பை: கதையின் தேவைக்காக லிப் லாக் முத்தம் கொடுத்து நடிக்கிறேன். ஆடையை குறைத்து நடிக்கிறேன். நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிக்கிறேன் என பல நடிகைகள் இயல்பாகவே அதெல்லாம் தங்களுக்கு பிடிக்காது. ஆனாலும், கதைக்காக பண்றேன் என்பார்கள். ஹாலிவுட்டில் எல்லாம் நிர்வாணக் காட்சிகள் ஒவ்வொரு முறையும் நடிகர்களையும் நடிகைகளையும் இதே காரணத்தை சொல்லித்தான் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், உண்மையில் அவை எல்லாமே அந்த படத்தையும் வெப்சீரிஸையும் சேல்ஸ் பண்ணும் வியாபார நோக்கங்கள் மட்டுமே என்று வெளிப்படையாக பேசியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர். 25 ஆண்டுகளாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் அவர் நெருக்கமான (இண்டிமேசி) காட்சிகளில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருவதாக சமீபத்தில் டர்ட்டி மேகஸினுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வயதாகி விட்டாலே திடீரென நடிகைகளுக்கு ஞானோதயம் பிறந்து இதுபோன்ற கருத்துக்களை சொல்வதாக நெட்டிசன்கள் கலாய்க்கவும் ஆரம்பித்துள்ளனர். இன்னொரு புறம் அவர் சொல்வதில் என்ன தவறு என்று கேட்கும் ரசிகர்களும் உள்ளனர்.
நடிகை கரீனா கபூர்: ரெஃப்யூஜி படத்தின் மூலம் 2000ம் ஆண்டு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை கரீனா கபூர். பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்த இவர் சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தேவ், ஃபிடா, டான், கோல்மால் ரிட்டர்ன்ஸ், 3 இடியட்ஸ், ஜப் வி மெட், பாடிகார்ட், ரா ஒன், ரவுடி ரத்தோர், ஹீரோயின், தபங் 2, சிங்கம் ரிட்டர்ன்ஸ், ஹேப்பி எண்டிங், குட் நியூஸ், க்ரூ, சிங்கம் அகைன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி பொங்க: 44 வயதாகும் கரீனா கபூர் கடந்த ஆண்டு வெளியான க்ரூ படத்தில் கூட கவர்ச்சி பொங்க நடித்திருப்பார். இளைமை காலத்தில் எல்லாம் அவரது கிளாமர் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால், நடிகர்களுடன் உடலுறவு காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளில் தனது 25 ஆண்டுகால சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றும் அது தேவையில்லாத ஒன்று என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கரீனா கபூர்.
சினிமாவுக்குத் தேவையில்லை: எந்தவொரு படமாக இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும். கவர்ச்சி காட்சிகளும், அதீத ஆபாச காட்சிகளும் எந்தவொரு படத்தையும் ஓட வைக்காது. அதுபோன்ற ஆபாசமான காட்சிகளில் நடிக்கும் போது எனக்குத் தெரிந்து எந்தவொரு நடிகையும் கம்ஃபர்டபிளாக ஃபீல் பண்ண மாட்டாங்க. எனக்கு நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது ஏன் இப்படி எடுக்கிறாங்க, இது எந்தவகையில் கதையை நகர்த்த உறுதுணையாக இருக்கும் என்று தான் யோசிப்பேன். அதன் காரணமாகவே செக்ஸ் காட்சிகளில் நடிப்பதை முடிந்தவரையில் தவிர்த்து விடுவேன் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் கரீனா கபூர்.
கணவருக்கு கத்திக்குத்து: சமீபத்தில், கரீனா கபூரின் கணவர் சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் ரொம்பவே எச்சரிக்கையுடனே வெளியே சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.