ஒட்டன்சத்திரம்: பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

7 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்களில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்தை பொருத்தே சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு பச்சை மிளகாய் காய்கறி வரத்து அதிகரிப்பால் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற மிளகாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் பாலு, "திருச்சி மாவட்டம் மணப்பாறை, உடுமலைப்பேட்டை, துவரங்குறிச்சி, ஒட்டன்சத்திரம், தேனி பகுதிகளில் விளைவிக்கப்படும் பச்சை மிளகாய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருகிறது. இப்பகுதிகளில் அறுவடை இல்லாத காலங்களில் ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கப்படும் மிளகாய் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

விவசாயிக்கு நேர்ந்த துயரம்… பூவன் வாழை விலை வீழ்ச்சி…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பச்சை மிளகாய் அறுவடை நன்றாக உள்ளது. இதனால் வரத்து எல்லா மார்க்கெட்டுகளுக்கு அதிமாக வரத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளிலேயே வியாபாரிகள் மிளகாய் வாங்கிவிடுகின்றனர். இதனால் பிற பகுதிகளில் இருந்து மிளகாய் வாங்க ஒட்டன்சத்திரம் வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

மிளகாய்

கடந்த மாதம் வரை பச்சை மிளகாய் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், 10 முதல் 15 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமில்லாது, வியாபாரிகளுக்கு நஷ்டத்தை கொடுக்கும். வரத்தை பார்க்கும்போது இதேநிலை சில வாரங்களுக்கும் நீடிக்கும் என்ற தோன்றுகிறது" என்றார்.

‘பறிப்புக் கூலிகூட கிடைப்பதில்லை!’ - தேங்காய் விலை வீழ்ச்சி... தேம்பும் விவசாயிகள்!
Read Entire Article