ARTICLE AD BOX
புவனேஸ்வர்: ஒடிசாவில் 16 மாத குழந்தை உடல் உறுப்பு தானம் செய்ததால் 2 நோயாளிகளுக்கு புது வாழ்வு கிடைத்தது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை விடுதி காப்பாளர் மகன் ஜான்மேஷ் லெங்கா. 16 மாத குழந்தையான ஜான்மேஷ் லங்காவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் மார்ச் 1 அன்று மூளைச்சாவு அடைந்தான். அவனது பெற்றோர் 16 மாத குழந்தையின் உடல் உறுப்பை தானம் செய்வதாக அறிவித்தனர். குழந்தையின் கல்லீரல் அகற்றப்பட்டு டெல்லி கல்லீரல் அறிவியல் நிறுவனத்தில் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. சீறுநீரகங்கள் அகற்றப்பட்டு புவனேஸ்வர் எய்ம்சில் இளம் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
The post ஒடிசாவில் 16 மாத குழந்தை உறுப்பு தானம் இரண்டு நோயாளிகளுக்கு புதுவாழ்வு appeared first on Dinakaran.