ஐயோ…. எமர்ஜென்சி வார்டில் அந்த கதை…. டாக்டர் வேலையை உதறிய அனிதா விஜயகுமார்….!!!

5 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகுமார். இவருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என்று 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்து கண்ணுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என 3 பிள்ளைகள் உள்ளன. அதில் அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இவர் மருத்துவ பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனால் அவரிடம் பலரும் ப்ரொபஷனலின் உச்சத்தில் இருக்கும்போது எதற்காக விருப்ப ஓய்வு பெற்று வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளிக்க விரும்பிய அவர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கு என்னுடைய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து என்னை படிக்க வைத்தனர். எனக்கு அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மக்களோடு பழக வேண்டும், மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று நான் படித்து முடித்ததும் 20 ஆண்டுகள் ப்ரொபோசர் வேலை பார்த்தேன்.

அதற்குப் பிறகு அடுத்தடுத்த உயர்வு பெற்று, கடைசியாக ஓய்வு பெரும் வரை, 15 வருடங்கள் எமர்ஜென்சியில் வேலை பார்த்தேன். அப்போது பல உயிர்கள் போற நேரத்தில், என்னுடைய குடும்பத்தை பாக்கணும் கெஞ்சுவார்கள். யாரும் நான் வாங்கி வைத்த சொத்து வேணும், நான் வாங்கி வைத்த பொருள்களை பார்க்கணும் என்று கேட்கவில்லை. காரணம் எல்லோரும் கடைசி நேரத்தில் உறவுகளை மிஸ் பண்றாங்க. ஆனால் அதை நான் பண்ணக்கூடாது என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பணத்தை சேர்த்து விட்டேன்.

இதனால் என்னுடைய குடும்பம், உறவுகள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைத்து தான் நான் விருப்ப ஓய்வு பெற்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு முடிந்த அளவிற்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், நண்பர்களோடு நேரத்தை செலவிடுங்கள், வாழ்க்கை என்பது மிக மிக குறுகியது யாருக்கு எப்போ என்ன நடக்கும்னு தெரியாது இருக்கிற நாள் வரைக்கும் நமக்கு பிடித்ததை செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு நெடிசன் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article