ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்... சபரிமலையில் இனி நேரடியாக சாமியை தரிசிக்கலாம்..!

4 days ago
ARTICLE AD BOX

சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என அழைக்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணிய ஸ்தலம் சபரிமலையே ஆகும்.

டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள மேம்பாலத்தில் ஏறாமல் நேராக சென்று சுவாமி தரிசனம் செய்வது தொடர்பான சோதனை முயற்சி மார்ச் 14ஆம் தேதி பங்குனி மாத பூஜையின்போது அமல்படுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மண்டல மகர விளக்கு பூஜை காலங்களுக்கு அடுத்தபடியாக விசு தரிசனத்துக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றன. எனவே, அதற்கு முன்னதாகவே சோதனை முயற்சி நடக்கிறது.

பதினெட்டாம்படி ஏரி செல்லும் பக்தர்கள், மேம்பாலத்தில் ஏறாமல் பலி பீடத்தின் இருபுறம் வழியாக இரண்டு வரிசைகளில் நேரடியாக சுவாமி சன்னதியை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால் பலிபீடம் முதல் சுவாமி கருவறை வரை 15 மீட்டர் தூரம் தரிசனம் செய்தவரே பக்தர்கள் நகர்ந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும். பக்தர்கள் சுமார் 30 நொடிகள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் இப்போது ஐந்து நொடிகள் கூட கிடைப்பதில்லை மூன்றாவது வரிசை இருமுடி இல்லாமல் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!

1989இல் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதே நேரம் கருவறையை விட உயரத்தில் அமைந்துள்ள மேம்பாலத்தை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது. அதற்குப் பிறகு இருமுறை பலிபீடம் வழியாக பக்தர்களை அனுமதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கட்டுக்கடங்காத கூட்டம் வரும் போது இவ்வழியாக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் மேம்பாலம் பயன்படுத்தப்பட்டது. இப்போது மேம்பாலத்தை அகற்றாமல் பக்தர்கள் காத்திருக்கும் வரிசை மர கூட்டம் வரை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.  இப்போது பலிபீடம் முதல் கருவறை வரை செல்லும் பாதையில் நெரிசலை தவிர்க்க இரண்டு வரிசைகளாக செல்லும் வகையில் நடுவில் நீளமாக உண்டியல் அமைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தரைத்தளம் ஒரே உயரத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோயில் ஆகம விதிகளுக்கு முன்பாக எந்த வடிவ மாற்றமும் செய்யாததால் புதிய முயற்சிக்கு கோவில் தந்திரி, கேரளா ஐகோர்ட் அனுமதியும் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article