ARTICLE AD BOX
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்தாலே பல அதிரடி சம்பவங்கள் எப்போதும் நடக்கும். அதே போல ஐபிஎல் தொடரில் விதிமுறைகளும் மிக கடுமையாக இருக்கும். ஐபிஎல் 2025ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி, பயண கட்டுப்பாடு வரை பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் புதிய விதிகள் பற்றி பார்ப்போம்.
மேலும் படிங்க: பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!
ஐபிஎல் 2025ல் புதிய விதிகள்:
- பயிற்சிக்காக மைதானம் வரும் போதும், போட்டி நடைபெறும் நாட்களிலும் அனைத்து வீரர்களும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று பிசிசிஐ விதிகளை அறிவித்துள்ளது.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மைதானங்களுக்கு வருவதற்கும், செல்வதற்கும் அனுமதி இல்லை. அதே போல போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்களின் ட்ரெஸிங் ரூமிற்குள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- எந்த ஒரு வீரரும் தங்களின் ஜெர்சி எண்களை மாற்ற வேண்டும் என்றால், ஆடை மற்றும் உபகரண விதிகளின்படி, 24 மணி நேரத்திற்கு முன்பே பிசிசிஐக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் உட்பட 12 பேரை மட்டுமே அணியுடன் அழைத்து வர வேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால் உரிய அனுமதி பெற வேண்டும்.
- எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் போட்டி முடிந்த பின்பு நடைபெறும் நிகழ்வுகளில் புதிய ஆடை தொடர்பான விதிகளை பின்பற்ற வேண்டும். ஸ்லீவ்லெஸ் ஜெர்சிகள் மற்றும் ஃப்ளாப்பிகள் போன்ற ஆடைகள் அணிவது ஐபிஎல் 2025ல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனை மீறினால் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
- ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த மற்றும் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்களுக்கு சிறப்பு தொப்பிகள் வழங்கப்படுகிறது. சம்பத்தப்பட்ட வீரர்கள் குறைந்தது 2 ஓவர்களுக்கு அந்த தொப்பியை போட்டியின் போது அணிய வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- பயிற்சியின் போது மைதானங்களில் உள்ள LED ஸ்பான்சர்ஷிப் போர்டுகளில் பந்துகளை அடிப்பதை வீரர்கள் தவிர்க்க வேண்டும். அதிகமாக பந்துகள் படும் போது LED பழுது ஆவதை தடுக்க இது உதவும்.
- ஐபிஎல் அணிகளுடன் வரும் துணை ஊழியர்கள் கண்டிப்பாக தங்களது அடையாள அட்டையை அணிய வேண்டும். முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும், தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும்.
- போட்டி நடைபெறும் நாட்களில் மைதானம் முறையாக இருப்பதை உறுதி செய்வதற்காக வீரர்களுக்கு அனைத்து இடங்களிலும் பயிற்சி செய்ய இனி அனுமதி இல்லை. அதே போல உடற்பயிற்சி சோதனைகளை மேற்கொள்ளவும் அனுமதி இல்லை.
- மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது, ஒரு பக்க பிட்சை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு அணிக்கும் கூடுதல் பயிற்சி நேரம் வழங்கப்படாது.
மேலும் படிங்க: இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு ஆபத்தா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ