ARTICLE AD BOX
லக்னௌ பந்துவீச்சாளர் மோஷின் கானுக்கு பதிலாக அணியில் இணைந்தார் ஷர்துல் தாக்குர்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அபாட்ர வெற்றி பெற்றது.
லக்னௌ அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னௌ அணி தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுடன் மார்ச். 24இல் மோதுகிறது.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மோஷின் கான், மயாங் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்கள்.
ஐபிஎல்லில் இதுவரை 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷர்துல் தாக்குர், பேட்டிங்கில் 307 ரன்கள் குவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாக்குர் 11 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Headlines don’t matter, The Lord does
Shardul is home pic.twitter.com/nd6ouD3otX
Wishing you a speedy recovery, Mohsin.
You'll be missed pic.twitter.com/CTn48qawzT