ஐபிஎல் 2025.. லக்னோ அணி இனி முன்பு போல் இருக்காது.. கேப்டன் ஆன உடன் ரிஷப் பண்ட் செய்த மாற்றம்

9 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் களம் இறங்கியது. இதில் குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும், மறுமுறை இறுதிப் போட்டி வரையும் வந்து சாதித்தது. ஆனால் குஜராத் அணி பெற்ற வெற்றியை லக்னோ அணியால் பெற முடியவில்லை.

அந்த அணியில் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றது. கேப்டன் கே எல் ராகுலுக்கு போதிய மரியாதை அணி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும் கேப்டனின் நடவடிக்கையில் ஒட்டுமொத்த அணியும் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ரிஷப் பண்ட் எடுத்த முடிவு:

இந்த சூழலில் கே எல் ராகுல் அணிக்கு சென்ற நிலையில் தற்போது புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் வந்தவுடன் பல மாற்றங்களை செய்திருக்கிறார். என் முதலாவதாக அணியில் வீரர்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ரிஷப் பண்ட் ஈடுபட்டு இருக்கிறார்.

இதற்காக அணி வீரர்களை அழைத்து ரிஷப் பண்ட்  பேசிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில்,” நமது அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.அணி நிர்வாகமும் அனுபவம் வாய்ந்தவர்களால் தான் நடத்தப்படுகிறது. நமது அணியில் பல சீனியர் வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டும்.”

நல்ல சூழலை உருவாக்கனும்:

“உங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு உங்களுடைய அனுபவத்தை நீங்கள் சொல்லித் தாருங்கள். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கருத்தை முன்வந்து சொல்ல வேண்டும். அப்படி ஒரு சூழலை தான் நான் உருவாக்க விரும்புகின்றேன்.”

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு லீகல் நோட்டீஸ்.. என்ன நடந்தது?

“இதை சொல்வது சுலபமாக இருந்தாலும், நாம் அதை செய்ய வேண்டும் என்றால் உங்களின் ஒத்துழைப்பு எனக்கு கண்டிப்பாக தேவை. வீரர்கள் நினைத்தால் தான் நாம் நினைக்கும் சூழலை உருவாக்க முடியும். நான் முடிந்தவரை என் அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பேன். வீரர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம்பினால் தான் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது என்னுடைய கொள்கை” என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

The post ஐபிஎல் 2025.. லக்னோ அணி இனி முன்பு போல் இருக்காது.. கேப்டன் ஆன உடன் ரிஷப் பண்ட் செய்த மாற்றம் appeared first on SwagsportsTamil.

Read Entire Article