ஐந்து ஆண்டுகளில் ராமர் கோவில் நிர்வாகம் அரசுக்கு இவ்ளோ வரி செலுத்தி இருக்கா?

7 hours ago
ARTICLE AD BOX
ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்

ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 17, 2025
09:52 am

செய்தி முன்னோட்டம்

ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.

இது அயோத்தியின் மத சுற்றுலா வளர்ச்சியின் பொருளாதார தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இந்தத் தொகை பிப்ரவரி 5, 2020 முதல் பிப்ரவரி 5, 2025 வரை செலுத்தப்பட்டது என்றார்.

மொத்தத்தில், ரூ.270 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.130 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது.

நிதி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அதிகாரிகளால் அறக்கட்டளை வழக்கமான தணிக்கைகளுக்கு உட்படுகிறது என்றும் சம்பத் ராய் தெரிவித்தார்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள் எண்ணிக்கை

அயோத்தி பார்வையாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்து, ஒரு முக்கிய மத சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டில் நகரம் 16 கோடி பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது. 5 கோடி பக்தர்கள் ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

மகா கும்பமேளாவின் போது, ​​1.26 கோடி மக்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். இது உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை உயர்த்தியது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிட ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த கோயில் ஜனவரி 22, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article