ஐடி துறை வருவாய் 5.1 சதவிகிதம் அதிகரிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

மும்பை: ஐடி துறை அமைப்பான நாஸ்காம் 2025ஆம் நிதியாண்டின் வருவாய் 5.1 சதவிகிதம் அதிகரித்து 282.6 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளது.

2026ஆம் நிதியாண்டில் இந்தத் துறையின் வருவாய் 300 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று அதன் தலைவர் ராஜேஷ் நம்பியார் நாஸ்காம் டெக்னாலஜி லீடர்ஷிப் கூட்டத்தில் தெரிவித்தார்.

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கருத்தில் கொண்டு இது ஒரு நல்ல முடிவு என்று நம்பியார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிதியாண்டு 2025ல் வணிக முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1.26 லட்சம் அதிகரித்து 58 லட்சமாக உயர்ந்துள்ளது என்று நாஸ்காம் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஐடி சேவை நிறுவனங்களின் 2025 நிதியாண்டு வருவாய் 4.3 சதவிகிதம் உயர்ந்து 137.1 பில்லியன் டாலராகவும், வணிக செயல்முறை அவுட்சோர்சிங் வருவாய் 4.7 சதவிகிதம் உயர்ந்து 54.6 பில்லியன் டாலராகவும் இருக்கும். பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ளது.

நிறுவனங்களின் உள்நாட்டு வருவாய் 7 சதவிகிதம் உயர்ந்து 58.2 பில்லியன் டாலராக இருக்கும். இது ஏற்றுமதி வருவாயில் 4.6 சதவிகித வளர்ச்சியை விட வேகமாக வளர்ந்து 224.4 பில்லியன் டாலராக இருக்கும்.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.86.72-ஆக முடிவு!

Read Entire Article