ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் ஜெயித்த வங்கதேசம் பேட்டிங் தேர்வு.. இந்தியா பந்துவீச்சு

4 days ago
ARTICLE AD BOX

இந்தியா பிளேயிங் லெவனில் ரோஹித், கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ஹர்திக், ஜடேஜா, அக்சர், குல்தீப், ஹர்ஷித், ஷமி ஆகியோர் உள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் அனைத்து லீக் போட்டிகளும் இந்த மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்த இந்தியா, தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மறுபுறும் வங்கதேசம் கடந்த டிசம்பரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெறும் துபாய் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இருந்து வந்துள்ளது. இங்கு நடைபெற்ற 58 ஒருநாள் போட்டிகளில் நான்கு முறை மட்டும் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. இரண்டு புதிய பிட்ச்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பின்னர் ஸ்பின்னர்களுக்கும் உதவும் வகையில் பிட்ச் செயல்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வங்கதேசம் இதுவரை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இதுவரை ஒரேயொரு முறை மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

41 ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் 32இல் இந்தியா, 8 போட்டியில் வங்கதேசம் அணி வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.

வங்கதேசம்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹொஸ்மான், பர்வேஸ் ஹொஸ்மான், சாகிப், நஹித் ராணா

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், href= https://tamil.hindustantimes.com/topic/cricket>கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
Read Entire Article