ARTICLE AD BOX
சென்னை,
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 'ஆன்லைன்' டிக்கெட் விற்பனை ஒரு சில நிமிடங்களில் முடிந்தது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டிருந்த போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.