ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த சாம் கர்ரன்

10 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இதனையொட்டி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சி முகாமில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கர்ரன் இன்று இணைந்துள்ளார். இவரை கடந்த மெகா ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

Sam things are always Yellove! #WhistlePodu #DenComing pic.twitter.com/e8jedt7jiA

— Chennai Super Kings (@ChennaiIPL) March 16, 2025

Read Entire Article