ARTICLE AD BOX

image courtesy: PTI
சென்னை,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதே உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அத்துடன் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கு இங்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனால் உள்ளூர் ரசிகர்களின் அபாரமான ஆதரவுடன் சென்னை அணி களமிறங்க உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.
இந்நிலையில் இந்த போட்டியில் மகேந்திரசிங் தோனி, சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவின் மாபெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா (4687 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து தோனி 4669 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இவர் இன்னும் 19 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சுரேஷ் ரெய்னாவை முந்தி சென்னை அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக மாபெரும் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.