‘ஏஸ்’ படத்திலிருந்து ‘உருகுது உருகுது’ பாடல் வெளியீடு!

9 hours ago
ARTICLE AD BOX

ஏஸ் படத்திலிருந்து உருகுது உருகுது பாடல் வெளியாகியுள்ளது.Urugudhu Urugudhu song out from Ace Movie!

விஜய் சேதுபதியின் 51 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஏஸ். இந்த படத்தினை ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். 7CS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஆர். கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வெவ்வேறு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி இப்படமானது விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த் ஆகியோரின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து உருகுது உருகுது எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. தாமரையின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் கபில் கபிலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article