ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை - ஒரு சாமானியனால் அதன் விலையை குறைக்க முடியுமா?

1 day ago
ARTICLE AD BOX

தங்கம் என்பது செல்வம், ஆடம்பரம் மற்றும் சில இடங்களில் பாரம்பரியத்தின் சின்னமாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் நாம் காணும் அதன் விலை உயர்வு பல சாமானிய மக்களுக்கு ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்துகிறது. தற்போது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு உலகப் பொருளாதார சக்திகள் மற்றும் கொள்கைகளின் பங்கு இருந்தாலும், பொது மக்களால் மேற்கொள்ளப்படும் சில கூட்டு முயற்சிகள் கூட அதன் விலையை தீர்மானிக்கலாம். அப்படி என்னென்ன புதுமையான யுக்திகள் அதில் உள்ளன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்...

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதற்கான முக்கிய காரணம் மக்களால் பின்பற்றப்படும் கலாச்சாரம் மற்றும் முதலீடு (Investment) சார்ந்த விஷயங்கள். இவற்றின் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

பொதுவாக விழாக்கள் மற்றும் சில கொண்டாட்டங்களில் பிறரிடம் தங்கள் ஆடம்பரத்தை பறைசாற்ற தங்கத்தை ஒரு காட்சி பொருளாக பயன்படுத்துகின்றனர். எனவே அதற்கு மாற்றாக சிலவற்றை ஊக்குவிப்பது தங்கத்தின் விலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

விஷேசம், விழா போன்ற நேரங்களில் மக்கள் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்கு தங்கத்தை விட மலிவு விலையில் கிடைக்கும் செயற்கை நகைகளை (Artificial jewellery) நீங்கள் தேர்ந்தெடுத்து அணியலாம் அல்லது வெள்ளி போன்ற பிற உலோகங்களுடன் சேர்ந்த தங்கத்தைக் கூட நாம் உபயோகிக்கலாம்.

இதுபோக தனிநபர்கள் சொந்தமாக ஆபரணங்களை வாங்குவதற்கு பதிலாக நகையை வாடகைக்கு கூட எடுக்கலாம். இந்த வகையான வாடகை முறை புதிய தங்கத்தை வாங்கும் தேவையை குறைக்கிறது.  

இதையும் படியுங்கள்:
இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க: 10 லட்சம் கிடைக்காது!
தங்கம்

புதுப்பிப்பு:

ஏற்கனவே உள்ள தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது மற்றொரு பயனுள்ள விஷயமாகும். பழைய ஆபரணங்களை உருக்கி, நவீன கால டிசைன்களுக்கு ஏற்றார்போல் மறுவடிவமைப்பு செய்யும் யுக்தியை மக்கள் பின்பற்றலாம்.

இது ஒரு வகையில் புதிதாக பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் (Mining) அல்லது இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் தேவையை குறைக்கலாம்.

ஒரு உள்ளூர் கைவினைஞர்கள் (Craftmanship) மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்திலிருந்து நமக்கேற்ற தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்கும் போது சிலரின் படைப்பாற்றலை ஊக்குவிக்க முடியும் மற்றும் நமக்கான ஸ்டைலை நாமே தீர்மானிக்க முடியும்.

மற்ற முதலீடு வாய்ப்புகள்:

பலதரப்பட்ட முதலீடுகளைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதும் முக்கியமானது. பல இந்தியர்கள் தங்கத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான சொத்தாக பார்க்கிறார்கள்; ஆனால், அதற்கு மாற்றாக பங்குகள் (Stocks), பத்திரங்கள் (Bonds) அல்லது பரஸ்பர நிதிகள் (Mutual funds) போன்ற பிற லாபகரமான முதலீடுகளை மக்கள் தேர்வு செய்யலாம்.

இப்படி தங்கத்தின் மீதுள்ள முதலீடு சார்ந்த பார்வையை மாற்றுவது அதன் தேவையை ஓரளவுக்கு குறைக்கும். இது தங்கத்தின் விலை குறைப்பிலும் எதிரொலிக்கும்.

சொந்தபந்தகளின் கூட்டு முயற்சி: 

பந்தம், பாசம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்கள் சிலர் காசு, பணம் என்று வந்து விட்டால் அந்த பந்த பாசத்தை தூக்கி எரிந்து வில்லன்களாக மாறுகிறார்கள். இது இன்றைய ட்ரெண்டி (Trendy) மனித சமுதாயத்தின் குணமானாலும் அதை சற்று மாற்றி பார்க்கலாமே!

காரணம்,சொந்தம் பந்தம் என்று கூறுவதற்கான சான்றே ஒரு தேவை என்று வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதே ஆகும். எனவே குடும்ப விழா, ஊர் திருவிழா போன்ற நேரங்களில் தங்க நகைகளை ஒரு நல்ல புரிதலுடன் சொந்தபந்தங்கள் உள்ளே மாற்றிக் கொண்டு உபயோகப்படுத்தலாம். இந்த முறை பல குடும்பங்களில் எதிரொலிக்கும்போது ஒட்டு மொத்த இந்தியாவின் தங்கத்தின் தேவையையும் குறைக்கலாம்.  

அரசாங்க முன்னெடுப்புகள்:

கடைசியாக, தங்கத்தின் விலையை ஒரு நிலையில் வைக்க சில அரசாங்கக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். தங்கத்தின் இறக்குமதி வரிகளை குறைக்க வழிவகை செய்யலாம்.

தங்கம் அல்லாத சில முதலீடுகளை பயன்படுத்துவோருக்கு என ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். மேலே குறிப்பிட்டதை போல் கைவினைத்திறனுக்கான (Craftsmanship) 'மேக் இன் இந்தியா' முயற்சிகளை மேலும் நாடெங்கும் ஊக்குவிப்பது கூட இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்திற்கான தேவையை சற்று குறைத்து சாமானியன் விரும்பும் நியாயமான விலைக்கு தங்கம் விரைவில் வருவதைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட சிம் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
தங்கம்
Read Entire Article