ஏர்டெல்லுடன் இணைந்த எலான் மஸ்க் நிறுவனம்.. இந்தியாவில் விரைவில் செயற்கைக்கோள் சேவை!

14 hours ago
ARTICLE AD BOX
Published on: 
11 Mar 2025, 4:51 pm

அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். இவரது விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக, இந்தியாவிலும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

airtel signs deal with elon musk spacex starlink internet india
airtel, starlinkx page

இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் எலான் மஸ்க் நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

airtel signs deal with elon musk spacex starlink internet india
இந்திய அரசின் நிபந்தனைகள் ஏற்பு.. விரைவில் களம்காணும் எலான் மஸ்க் நிறுவனம்!
Read Entire Article