ARTICLE AD BOX
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார், விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். அருள்குமாரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இவரது மகன் தேவனேஷ்(4), நேற்று மாலை அருள்குமாரின் மகன் பரத்துடன் வீட்டின் அருகே உள்ள அனாதிமங்கலம் பெரிய ஏரி பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளான். அப்போது ஏரியில் மூழ்கி பலியாகினர்.
The post ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.