ஏங்க அது நான் இல்லங்க… டிராகன் இயக்குனருக்கு பதில் சின்னத்திரை பிரபலத்துக்கு கிடைத்த லக்!

2 days ago
ARTICLE AD BOX

Dragon: டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு கிடைக்க வேண்டிய பாராட்டு சின்னத்திரை பிரபலத்துக்கு சென்றது குறித்து அவர் போட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு சீசனில் ஒரு படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும். அப்படி ஒரு படமாக தான் தற்போது டிராகன் அமைந்துள்ளது. சாதாரண கதைக்களமாக இருந்தாலும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தின் திறமையான டைரக்‌ஷனால் தற்போது வரவேற்பை பெற்றுள்ளார்.

படம் முதலில் கிடைத்த பாசிட்டிவ் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ச்சியாக காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. படத்தின் வசூல் உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களும் இப்படத்தினை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து வருகின்றனர்.

படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் முதல் ஹீரோயின் அனுபமா, காயுடு என பலரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இயக்குனர் அஸ்வத்தும் தற்போது கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக அடையாளப்படுத்தும் இடத்தினை பெற்று இருக்கிறார்.

எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்வீட்டுகளும் அவருக்காக குவிந்து வந்தது. ஆனால் பலர் அவரை டேக் செய்வதற்கு பதில் சின்னத்திரை தொகுப்பாளரான அஸ்வத்தை டேக் செய்து இருக்கின்றனர். இதுகுறித்து அவர் தற்போது புதிய ட்வீட் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அதில், கடந்த சில நாட்களாகவே சிலர் டிராகன் வெற்றிக்கு என்னை தவறாக டேக் செய்கின்றனர். இந்த புகழுக்கு உண்மையான சொந்தக்காரர் இயக்குனர் அஸ்வத் அண்ணா. எங்க பெயர் ஒன்றாக இருப்பதால் குழப்பம். அவருக்கு சரியாக டேக் செய்யுங்கள்.

அஸ்வத் அண்ணா எனக்கு தவறாக டேக் செய்த பதிவில் இருந்து ஒன்னு தெரிகிறது. டிராகன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நானும் படம் பார்த்தேன். சூப்பரா இருக்கு. சிம்பு ரசிகரான நான் தற்போது சிம்பு51க்கு ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Read Entire Article