ARTICLE AD BOX
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான அடுத்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. டீசர் வீடியோவுக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் "மதராஸி" படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடித்து வரும் "சிக்கந்தர்" படத்தையும் இயக்கி வருகிறார். இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வரும் நிலையில், இவை இரண்டின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சற்றுமுன் "சிக்கந்தர்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 20 விநாடிகள் கொண்ட இந்த டீசரில், அதிரடி ஆக்சன் காட்சிகள், நாயகி ராஷ்மிகா மந்தனாவுடன் ரொமான்ஸ் காட்சிகள், கலர்ஃபுல்லான பாடல் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் சல்மான் கான், சஞ்சய் ராஜ்கோட் என்ற கேரக்டரிலும், ராஷ்மிகா மந்தனா, சாய் ஸ்ரீ என்ற கேரக்டரிலும் , சத்யராஜ், அமைச்சர் பிரதான் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.