ஏ.கே 74 துப்பாக்கியால் சுட்டேன்.. மேசையை தட்டி ஆக்ரோஷமாகச் சொன்ன சீமான்!

2 hours ago
ARTICLE AD BOX

ஏ.கே 74 துப்பாக்கியால் சுட்டேன்.. மேசையை தட்டி ஆக்ரோஷமாகச் சொன்ன சீமான்!

Erode
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, "ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்" என மேசையைத் தட்டி ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார் சீமான். கடந்த சில நாட்களாக சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என பலரும் விமர்சித்து வரும் நிலையில் காட்டமாகப் பேசியுள்ளார் சீமான்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாளையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரை ஆதரித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

erode east by election seeman naam tamilar katchi

இந்நிலையில், நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசி உள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். "சுட்டுப் பயிற்சி எடுத்தபோது துப்பாக்கி பற்றி பாடம் எடுத்தார். ஏகே 74 துப்பாக்கி சின்னதா குச்சி மாதிரி இருக்கும். அரிசி மாதிரி தான் இருக்கும் தோட்டா. சுட்டுக்கொண்டே இருக்கும்போது அண்ணன் சொன்னார். ரஷ்யாவில் இராணுவத்தில் ஏகே 47 இருந்தது. அதை வாங்கி காவல்துறைக்கு கொடுத்துவிட்டு இப்போது ராணுவத்துக்கு ஏகே 74 கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

அதன்பிறகு இப்போது நம்மிடம் இருக்கிறது. ரஷ்யாவிடமும் நம்மிடமும் மட்டும் தான் ஏகே 74 இருக்கிறது என்றார். நம்மிடம் இருக்கும் இந்த துப்பாக்கி வேறு எங்குமே இல்லையா என்று கேட்டேன். ஆமாம் என்றார். இந்தியாவிலும் இல்லை என்றார். அப்படி என்றால் இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான் என்றேன். அதற்கு அவர், ஆமாம், இதை அங்கே போய்ச் சொல்லுங்கள் என்றார். ஆமாடா.. ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்." என ஆக்ரோஷமாகப் பேசினார் சீமான்.

மேலும் பேசிய சீமான், "ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியவன் நான் தான். உங்களைப் போல கொள்ளையடித்து, ஊரான் சொத்தை விற்று உலையில் போட்டு சேர்த்த சொத்து அல்ல. மக்களுக்காக போராடியதால் வந்த வழக்கு. உண்மையிலேயே பெரியார் ஆதரவாளர்கள் என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் உண்மையான எதிரியைச் சந்திக்கிறீர்கள். தமிழினத்திடம் உங்கள் தத்துவம் சரணடைந்து சாக வேண்டும்" என ஆவேசமாகப் பேசினார்.

சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த சமயத்தில் இலங்கையில் இருந்த தமிழர்கள் பலர், சீமான், பட ஷூட்டிங்கில் தான் துப்பாக்கி பயிற்சி எடுத்தார் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் தான் பிரபாகரன் தனக்கு ஏகே 74 துப்பாக்கியால் சுட பயிற்சி கொடுத்தார் எனக் கூறி உள்ளார் சீமான்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ன. திராவிடர் கழகம், திமுக, தபெதிக, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்து உள்ளன.

More From
Prev
Next
English summary
During the Erode East constituency by-election campaign, Seeman made an aggressive statement by banging on the table, saying, “I shot with an AK 74 rifle.” Seeman has made an aggressive statement in the past few days, as many have been criticizing the photo of Seeman with Prabhakaran as fake.
Read Entire Article