ARTICLE AD BOX
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

AR Rahman Discharged From Apollo Hospital : 58 வயதாகும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரகுமானுக்கு சில பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். ரகுமான் தற்போது ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகிறார். அவர் லண்டலில் இருந்து இன்று காலை தான் சென்னைக்கு வந்திருக்கிறார். உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததால் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டாராம். லண்டனில் அதிக வேலை இருந்ததாலும், கூடவே நோன்பு இருந்ததாலும் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டாராம்.

அதன்பின் உடல் சோர்வு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான். அங்கு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பியதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இன்று காலை ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரே படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா! எல்லா பாட்டும் ஹிட்டு, அது என்ன படம்?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுக்கும் ஆபரேஷன் பண்ண வேண்டியிருந்ததால ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். கடந்த 1995ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ராவுக்கும் கல்யாணம் ஆச்சு. 29 வருஷம் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி போன வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. இவங்களுக்கு கதீஜா, ரஹீமா, ஆமீன் என மூணு புள்ளைங்க இருக்காங்க. விவாகரத்துக்கு பின் சாய்ராவும் ரகுமானும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடைசியாக சாவா படத்திற்கு இசையமைத்து இருந்தார். ராஷ்மிகா, விக்கி கெளஷல் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது. அடுத்ததாக கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர ரவி மோகனின் ஜீனி படமும் ரகுமான் கைவசம் உள்ளது.
இதையும் படியுங்கள்... பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?