ARTICLE AD BOX
திருவள்ளூர்: சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின்படி, புற்றுநோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
புற்றுநோயின் ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்களை பரப்புதல், ஆரம்ப பரிசோதனை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையை ஊக்குவித்தல், சுகாதாரமான மற்றும் பொறுப்பான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர்.
புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் புற்றுநோய்த் தடுப்பு ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முன்னேற்றங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினர். புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதாக மாணவர்கள் முறையான உறுதிமொழி எடுத்து, மாணவர்கள் தமது சமூக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
The post எஸ்ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி appeared first on Dinakaran.