ARTICLE AD BOX
*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து கொடநாடு,கீழ் கோத்தகிரி,சோலூர்மட்டம் செல்லக்கூடிய முக்கிய சாலை வழி சந்திப்பான எஸ்.கைக்காட்டி பகுதியில் போக்குவரத்து இடையூறுகளை தடுக்கும் வகையில் சாலை விரிவாக்கப்பணி நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை துறையினர் மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கோடைக்காலம் நெருங்கவுள்ள நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முனைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோத்தகிரியில் இருந்து கோடநாடு, கீழ் கோத்தகிரி,சோலூர்மட்டம் செல்லக்கூடிய முக்கிய சாலை வழி சந்திப்பான எஸ்.கைக்காட்டி பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தடுக்கும் வகையில் கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் அறிவுறுத்தலின் படி,உதவி கோட்ட பொறியாளர் சங்கர் லால், உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையிலான கோத்தகிரி நெடுஞ்சாலை துறையினர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாலை விரிவாக்கப்பணியினை மேற்கொண்டனர்.
தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று கோத்தகிரியில் இருந்து கீழ் கோத்தகிரி,சோலூர்மட்டம் சாலையிலும், கொடநாடு செல்லும் சாலையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் கோடை காலத்தில் கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பயணிக்க வழிவகை இருக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post எஸ்.கைகாட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு appeared first on Dinakaran.