"எல்லாத்துக்கும் காரணம் இந்த மந்திரவாதி தான்”.. மாந்திரீக பூஜை செய்தவர் எரித்துக் கொலை!

20 hours ago
ARTICLE AD BOX

"எல்லாத்துக்கும் காரணம் இந்த மந்திரவாதி தான்”.. மாந்திரீக பூஜை செய்தவர் எரித்துக் கொலை!

Hyderabad
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவே சான்றாக உள்ளது.

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை பகுதியில் உள்ள தொம்புரிகுடா கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் வசித்து வந்தார். இவர் மாந்திரீக பூஜைகள் செய்து வந்துள்ளார். தொம்புரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள நிலையில், அவற்றில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

Andhra crime

தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க அடாரி தொம்புரு குடும்பமே காரணம் என நினைத்து கோபமடைந்துள்ளனர். அடாரி தொம்புரு செய்யும் மாந்திரீகமே தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து, அடாரி தொம்புருவை கிராம மக்கள் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று கற்கள், கட்டைகளால் தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த ஊரைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாந்திரீக பூஜை செய்து வந்த நபரால் தான் தாங்கள் கஷ்டங்களை அனுபவிப்பதாக கருதி, அந்த நபரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
English summary
Andhra Pradesh villagers burned an elderly man to death for performing a witchcraft ritual.
Read Entire Article