ARTICLE AD BOX
மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர். அப்போது சில எலிகளுக்கு ஒருநாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டது.
2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் ஒருநாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆய்வு மூலம் டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.