எலான் மஸ்க் சொத்து மதிப்பு 4வது முறை கடும் சரிவு!

21 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 22.2 பில்லியன் டாலர் (ரூ. 1.93 லட்சம் கோடி) சரிந்துள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) பொறுப்பாளருமான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்த பிறகு தன்னுடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இதனிடையே எலான் மஸ்க் சொத்து மதிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 8% அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால், அவரின் சொத்து மதிப்பு சரிந்தது.

இதன்மூலம் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 22.2 பில்லியன் சரிந்து 358 பில்லியனாக உள்ளது.

அவருடைய செல்வத்திலிருந்து இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னரும் இதே போன்ற இழப்புகளை எலான் மஸ்க் சந்தித்திருக்கிறார்.

இதுவரை 1 டிரில்லியன் மதிப்பிலான சொத்துகள் மஸ்க் வசமிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

Read Entire Article