ARTICLE AD BOX
எலான் மஸ்க்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என கனேடியர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நட்பு நாடுகள், பகை நாடுகள் என பாரபட்சமின்றி அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது வரிவிதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மிக முக்கியமாக அமெரிக்காவின் அண்டை நாடான கனடா மீது 25% வரியை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இனிமேல் அமெரிக்காவிற்கு கனடா தேவையில்லை என்று ஆவேசமாக பேசிய டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார். அமெரிக்காவுக்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா பொருட்கள் மீது வரி விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே பகை பற்றி எரிந்து வரும் நிலையில், எலான் மஸ்க்குக்கு எதிராக கனேடியர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

அதாவது கனடாவைச் சேர்ந்த 2,00,000க்கும் மேற்பட்ட மக்கள் எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா எழுத்தாளர் குவாலியா ரீட் கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் எலான் மஸ்க்குக்கு எதிரான மனுவைத் தொடங்கினார். எலான் மஸ்குக்கு எதிரான இந்த மனுவை கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஒப்படைப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து எலான் மஸ்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கனடா அரசாங்கம் முடிவெடுக்கும். கனேடிய சட்டத்தின்படி, பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது குடியுரிமையையும் கைவிடலாம். மோசடி, தங்கள் மக்களை தவறாக சித்தரித்தல் அல்லது குடியேற்றம் அல்லது குடியுரிமை விண்ணப்பத்தில் வேண்டுமென்றே தகவல்களை மறைத்தல் உள்ளிட்ட சில சந்தர்ப்பங்களில் கன்டா ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்யலாம்.
சாம்பியன்ஸ் டிராபியில் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதி! பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை!

கனேடிய குடியுரிமை ரத்து செய்யப்பட்ட ஒருவர் அதை மீண்டும் பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கனேடிய சட்டங்கள் கூறுகின்றன. உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் ஆகிய நிறுவனங்களை வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் தென்னாபிரிக்காவில் பிறந்தவர்.
எலான் மஸ்க் தனது தாயார் மேய் மஸ்க் மூலம் கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். மேய் மஸ்க் கனடாவின் மாகாணமான சஸ்காட்செவனின் தலைநகரான ரெஜினாவைச் சேர்ந்தவர். இதனால் எலான் மஸ்க் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என கனேடியர்கள் ஒன்று திரண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்கள். தேர்தலுக்கு முன்பே டொனால்ட் டிரம்ப் அதிபராக வேண்டும் என எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். டிரம்புக்கு நிதியை அள்ளிக்கொடுத்தார்.

பின்பு டிரம்ப் அமெரிக்காவின் அதிபரானதும் 'அரசு செயல் திறன்' (டிஓடிஜி )என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக தொழில் அதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். டிரம்ம்பின் முக்கிய ஆலோசகராக எலான் மஸ்க் இருக்கிறார். இப்போது டொனால்ட் டிரம்ப் கனடாவுக்கு எதிராக அதிக வரி விதித்ததுடன், கனடாவை அமெரிக்கா மாகாணம் என்றும் கனடா அதிபர் மாகானத்தின் தலைவர் என்றும் பேசி வருகிறார்.
இப்படி கனடாவுக்கு எதிராக பேசும் டிரம்புக்கு எலான் மஸ்க் உடைந்தையாக இருக்கிறார் என்றும் கனடாவின் தேசிய நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கனடா மக்கள் அவருக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் காக்ஸ் பஜாரில் விமானப்படைத் தளம் மீது தாக்குதல், ஒருவர் பலி!!