ARTICLE AD BOX
முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிங்க: இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
"எம்புரான்" டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன், எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் அளிக்கும் எனத் தெரிகிறது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்” திரைப்படத்தை, புகழ் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இப்படத்தினை தமிழில் கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கன்னடத்தில் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, தெலுங்கில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!
மேலும் படிங்க: ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காததற்கு சூர்யாதான் காரணமா? அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ