எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!

1 day ago
ARTICLE AD BOX

எம்புரான் படத்தில் நடித்ததுக்காக நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.

மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிருத்விராஜ், நடிகர் மோகன்லால் கலந்துகொண்டார்கள். அதில் பிருத்விராஜ் கூறியதாவது:

இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம். ஒரு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள். அக்‌ஷய் குமார் அப்படி இருந்திருக்கிறார்.

நாங்கள் இதுவரை இல்லாத ஒன்றை முயற்சித்து இருக்கிறோம். அதற்கு இப்படி எல்லாம் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும்.

ரூ.100 பட்ஜெட்டில் ரூ.80 கோடி நடிகர்களுக்கே செலவு செய்வதுபோல் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மொத்த செலவும் படத்தை உருவாக்க மட்டுமே உபயோகித்து இருக்கிறோம்.

மலையாளம் தவிர்த்து மற்ற மொழி நடிகர்களும் இந்தப் படத்துக்காக ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள் என்றார்.

Read Entire Article