எம்ஜிஆர் படத்திற்கு டியூன் போட மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்! பதறியடித்து ஓடிய புரட்சி தலைவர்!

3 hours ago
ARTICLE AD BOX

எம்ஜிஆர் படத்திற்கு டியூன் போட மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்! பதறியடித்து ஓடிய புரட்சி தலைவர்!

Television
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த நேற்று இன்று நாளை படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட மறுத்த கதை தெரியுமா? பின்னரி அவரை எப்படி எம்ஜிஆர் சமாதானப்படுத்தினார் என்பதையும் பார்க்கலாம்.

இந்த திரைப்படம் 1974 ஆம் ஆண்டு வெளியானது. நீலகண்டன் இயக்கத்தில், எஸ்.ஏ. அசோகன் தயாரிப்பில் வெளிவந்தது இந்த திரைப்படம். இதில் எம்ஜிஆர், மஞ்சுளா, லதா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

television mgr ms viswanathan

இதில் எம்.என்.நம்பியார், அசோகன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். எம்ஜிஆர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். சினிமாவில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள டெக்னாலஜியை நுணுக்கமாக தெரிந்து வைத்துக் கொண்டிருந்தவர்.

தயாரிப்பாளர்கள்

தன்னை அணுகும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் தனது ரசிகர்கள் ஏற்கும், விரும்பும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கதைகளையும் அமைக்குமாறு அறிவுறுத்துவார். அதிலும் அவர் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். இதனால்தான் எம்ஜிஆர் பாடல்கள் என்றால் அதில் காதல் இருந்தாலும் பல பாடல்களில் கருத்துகளும் இருந்தன என சொல்வார்கள்.

எம்ஜிஆர் கஷ்டம்

அதே நேரம் எம்ஜிஆர் கஷ்டம் என சொன்னால் யாராக இருந்தாலும் அவர்களுக்கான உதவியை செய்வார். துரோகம் செய்தது தெரிந்து கோபம் வந்தால் அவ்வளவுதான்! இவரை திரைத்துறையினர் சின்னவர் என்றுதான் அழைப்பார்கள்.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்

அது போல் தன்னால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைய கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். யாராவது கடன் சுமை பெற்றிருந்தால் அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து படங்களை நடித்து அவர்களை கைத்தூக்கியும் விடுவார்.

டியூன் போட சொன்ன எம்ஜிஆர்

இப்படிப்பட்ட நிலையில் வில்லன் நடிகர் அசோகரின் அமல்ராஜ் பிலிம்ஸுக்காக ஒரு படத்தை நடிக்க எம்ஜிஆர் ஒப்புக் கொண்டார். அந்த படம்தான் நேற்று இன்று நாளை. அசோகனிடம் சொல்லி எம்எஸ் விஸ்வநாதனை வைத்து பாடல்களுக்கு டியூன் போட சொன்னாராம் எம்ஜிஆர்.

50 பாடல்கள்

10 நாளில் 40 அல்லது 50 பாடல்களுக்கு மேல் டியூன் போடும் அளவுக்கு திறமைசாலி எம்எஸ்வி. அவர் எம்ஜிஆருக்காக சூப்பர் டியூன்களை எல்லாம் போட்டுக் கொடுத்தும் எம்ஜிஆர் நன்றாக இல்லை என்றே அசோகனிடம் சொன்னாராம்.

10 டியூன்

மீண்டும் ஒரு 10 டியூன் போட்டுக் கொண்டு போய் எம்ஜிஆரிடம் கொடுத்த போது, "இதெல்லாம் டியூனா, நல்லவே இல்லை. டைம் ஆனாலும் பரவாயில்லை, விசுகிட்ட சொல்லி நல்ல டியூனா ஒரு 30 போட சொல்லுப்பா" என்றாராம் எம்ஜிஆர்.

என்ன செய்வது என தெரியாமல் சங்கடத்துடன் எம்எஸ் விஸ்வநாதனை சந்திக்க சென்றாராம் அசோகர். அதுவரை எம்ஜிஆர் டியூன் நல்லா இல்லை என சொன்னதாக சொல்லாமல் பூசியே மெழுகி வந்த அசோகன், வேறு வழியின்றி, "டியூன் சரியில்லை என சின்னவர் (எம்ஜிஆர்) சொல்லிட்டாரு, வேறு 30 டியூன் போட்டு கொண்டு வரச் சொன்னாரு"னு அசோகன் சொன்னாராம்.

இனி உங்க படத்திற்கு டியூன் கிடையாது

அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன், கடும் கோபமடைந்து "இனி உங்க படத்திற்கு நான் போடுறதா இல்லை, போய் சின்னவர்கிட்ட சொல்லு" என்றாராம். பின்னர் எம்எஸ்வி டியூன் போட மாட்டேன் என சொன்ன விஷயம் எம்ஜிஆர் காதுகளை சென்றடைந்ததும், எம்எஸ்விகிட்ட எம்ஜிஆர் போனாராம். அங்கு எம்ஜிஆர், என்ன விசு என் படத்திற்கு இனிமே டியூன் போட மாட்டேனு சொன்னியாமே கேள்விப்பட்டேன், அது ஒன்றுமில்லை, நீ போட்ட எல்லா டியூனும் சூப்பர். ஆனால் டியூன் பிரமாதம் என சொல்லிவிட்டால் அசோகன் சூட்டிங் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு.

அசோகன் கேட்டாரு

கால்ஷீட் டைட் ஷெட்யூலில் இருந்தாலும் அசோகன் கேட்டதால் அவருக்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரிடம் கால்ஷீட் டைட் என நேரடியாக சொல்ல முடியவில்லை. இவர் படத்தில் நடிக்க சென்றால் ஒப்புக் கொண்ட படங்கள் பாதிக்கும். அதற்காக அசோகனுக்கு உதவி செய்யாம இருக்க முடியாது. அதனால்தான் நாட்களை கடத்த இப்படி செய்தேன், உன் டியூனை என்னுடைய படங்களில் பயன்படுத்துறதா முடிவு செய்துட்டேன்" என்றாராம்.

எம்ஜிஆர் அதிர்ச்சி

அப்போது எம்எஸ்வி அதிர்ச்சி அடைந்தாராம். இது போல் ஷூட்டிங்கை ஒத்தி போட எம்ஜிஆர் இது போல் சித்து விளையாட்டுகளை எல்லாம் விளையாடுவாராம். இந்த தகவல்களை எல்லாம் சாய் வித் சித்ராவில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்லியிருந்தார்.

More From
Prev
Next
English summary
Very interesting fact on MGR that M.S.Viswanathan refuses to do music for his movie Netru Indru Nalai.
Read Entire Article