ARTICLE AD BOX
கடந்த ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 85,432-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16
சதவீதம் அதிகம்.
பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனம் உள்நாட்டு சந்தையில் கடந்த ஜனவரி மாதம் 50,659 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 43,068-ஆக இருந்தது. இது 18 சதவீத விற்பனை வளா்ச்சியாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் உள்நாட்டு விற்பனை 23,948-லிருந்து 27,557-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.